யாழ். மறைமாவட்ட ஆயருடன்  செயலாளர் நாயகம் சந்திப்பு!

18516603_1412656172106799_2132130607_o Tuesday, May 16th, 2017

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் மேற்படி சந்திப்பு இன்றையதினம் (16) இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது –  எமது சமூகம் தமது பாரம்பரியமாக கடைப்பிடித்துவரும் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் பொருட்டும் அதற்கு சமய தலைவர்கள் மற்றும் சமய நிறுவனங்கள் ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பாகவும் குறிப்பாக தமிழர் மரபில் அருகிவரும் கலைப்படைப்புகள் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் அழிந்துவிடாமல் பாதுகாத்து கட்டியெழுப்பப்படல் வேண்டும்.

இதனிடையே எமது சமூகம் எதிர்கொண்டுள்ள சமூகவிரோத செயல்கள் மற்றும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தி அதனூடாக வருங்கால எமது சமூகத்தை சமூகப் பிறழ்வுகளிலிருந்து காப்பதற்கு இன்றைய இளைய சமூகத்தினருக்கு தேவையான விழிப்புணர்வுகளையும் அறிவுரைகளையும் வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் விஷேட கவனம் செலுத்தி ஆராயப்பட்டது.

அத்துடன் மக்களின் காணிவிடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, மீள் குடியேற்றம். காணாமல்போக செய்யப்பட்டவர்களது நிலை தொடர்பான  பொறுப்புக்கூறல், மக்கள் முன்னெடுத்துவருகின்ற போராட்டங்கள்,  கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீடமைப்பு வசதிகள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர்

இதன்போது இதன்போது கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.


தமிழ் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றின் உயிர்த்துடிப்புள்ள பாத்திரமாக திகழ்ந்தவர் மங்கையற்கரசி அம்ம...
அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது - நாடாளுமன்ற...
போதையற்ற தேசத்தை உருவாக்குவது எந்த வகையில் சாத்தியமாகும்? - சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி
மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்னும் வேலைத்திட்டத்தை அர்த்தபூர்வமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்-...
நிரந்தர விடியலின் சமாதான ஒளி வீசட்டும் - நத்தார் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா ! (வீடியோ இண...
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!