யாழ். மத்திய தபால் நிலைய பதிலாளர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சருடன் சந்திப்பு!

Saturday, March 20th, 2021

யாழ்ப்பாணம் மத்திய தபால் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பதிலாளர்களாக கடமையாற்றிய ஊழியர்கள் தமக்கு வழங்கப்படும் வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சரின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகை தந்திருந்த குறித்த ஊழியர்கள் இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் அவர்களிடம் தெளிவுபடுத்தினர்.

குறித்த விடயம் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் துறைசார்ந்தோரிடம் கலந்துரையாடியதன் பொருட்டு விரைவில் உரிய தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே

யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தாம் எதிர்கொண்டு வரும் இடர்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

குறிப்பாக நீண்டகாலமாக தாம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல்வேறு முன்பள்ளிகளில் கல்வி கற்பித்து வருகின்ற போதிலும் தமக்கு குறைந்தளவான மாத வருமானம் கிடைக்கப்பெற்று வருகின்றமையால் தாம் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருவதாகவும்,  டிப்ளோமா பாடநெறியை தாம் பூர்த்தி செய்த போதிலும் நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்கப்படாமல் இருப்பதாகவும் அந்த அடிப்படையில் தம்மை நிரந்தர நியமனங்களைப் பெற்று கௌரவமான மாதாந்த  ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஆவன செய்து தருமாறும் அமைச்சர் அவர்களிடம் முன்பள்ளி ஆசிரியர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் துறைசார்ந்தோரிடம் கலந்துரையாடி அதற்கான தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.

Related posts:

யாழ். மீன்பிடித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகவும், விரைவாகவும் தீர்வு காண்பேன். அமைச்சர...
அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வரும்வரை அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் - செயலாளர் நாயகம...
சமஷ்டி ஒளிந்திருப்பதாக கூறுவது இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையை தேடும் முயற்சியாகும் - நாடாளுமன்றில்...