யாழ் பல்கலை தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரச நிரந்தர நியமனம் தொடரில் அமைச்சரிடம் கோரிக்கை!

Saturday, April 13th, 2024

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா நடவடிக்கைகளுக்காக தனியார் ஒப்பந்த நிறுவனத்தினூடாக சிற்றூழியர்களாக பணியாற்றும் ஊழியர்கள் தமது தொழில் நிலைகளை நிரந்தரமாகி தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் அலுவலகத்துக்கு இன்றையதினம் (13.04.2024) வருகைதந்த குறித்த ஊழியர்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.

இதன்போது தாம் தனியார் நிறுவனம் ஒன்றினூடாக யாழ் பல்கலையில் கல்விசாரா சிற்றூழியர்களாக சில வருடங்களாக பணியாற்றி வருவதாகவும் தமது தொழில் நடவடிக்கைகள் ஒப்பந்த அடிப்படையிலானதாக இருப்பதால் தமது வாழ்வாதார பொருளாதரமீட்டல் கேள்விக்குறியாக இருக்கின்றது.

அதுமடுமல்லாது உறுதியான பொருளாதாரம் தமக்கு இன்மையால் தமது குடும்பங்கள்
நிலையானதொரு வாழ்க்கையை வாழமுடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே தமது குடும்ப நிலைகளை அவதானத்தில் கொண்டு தாம் பணிபுரியிம் தொழில் நடவடிக்கைகளை நிரந்தரமாக்கி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறித்த ஊழியர்களின் கோரிக்கையின் நியாயத்தன்மையை கருத்தில் கொண்ட அமைச்சர் அது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:


எல்லாள மன்னனது சமாதியை மீளப் புனரமைத்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க...
செயலாளர் நாயகத்திற்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற வடக்கிற்கான ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் முன்னாயத...