யாழ்.பல்கலையின் நிலை குறித்து நாடாளுமன்றில் குரல் கொடுத்த எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, October 9th, 2018

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தாதியியல் கற்கை நெறிக்கான பதிவினையும் அங்கீகாரத்தினையும் வழங்குவதில் தடைகள் ஏதும் காணப்படுகின்றனவா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே  கலாசார அலுவல்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அவர்களிடம் இவ்வாறு கெள்வி எழுப்பியிரந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஓர் அலகாகசெயற்பட்டு வருகின்ற இணை மருத்துவ பிரிவில் மருந்தகவியல் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம் தாதியியல் ஆகிய மூன்று பிரிவுகள் செயற்பட்டு வருகின்ற நிலையில் தாதியியல் கற்கை நெறிக்கு இதுவரையில் பதிவும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை எனத் தெரிய வருகின்றது.

இதன் காரணமாக சேவைகளில் பதவிப் பிரமாணம் வேலைவாய்ப்பு பதவி உயர்வுகள் உயர் கல்வி கற்பதற்கானத் தடை போன்ற பிரச்சினைகளை மேற்படி மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருப்பதாகத் தெரிய வருகின்றது.

அத்துடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதி வசதிகள் விளையாட்டு மைதானம் போன்ற தேவைகளும் ஏற்பட்டுள்ளன. மேலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முழுமையான தேவைகள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றினையும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அவர்களது பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தாதியியல் கற்கை நெறிக்கான பதிவினையும் அங்கீகாரத்தினையும் வழங்குவதில் தடைகள் ஏதும் காணப்படுகின்றனவா?

தடைகள் இருப்பின் அவற்றை நீக்குவதற்கும் தடைகள் இல்லை எனில் உடனடியாக மேற்படி பதிவினையும் அங்கீகாரத்தினையும் வழங்குவதற்குமான நடவடிக்கையினை எடுக்க முடியுமா?

பல்கலைக்கழக மாணவர்களின் வசதி கருதி மாணவர் விடுதிகள மற்றும் விளையாட்டு மைதானம் போன்றவற்றை அமைப்பதற்கும் மேலும் இத்துடன் இணைக்கப்;பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள முடியுமா?

இல்லை எனில் அதற்கான காரணத்தையும் உண்டு எனில் அது எப்போது சாத்தியமாகும் என்பதனையும் கூற முடியுமா? என்பதுடன் மேற்படி நிலைமையினை அவதானத்தில் கொண்டு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அவர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

முப்படைகளுக்குமான ஆளணியின்போது இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் -  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வல...
மாற்றுத்தலைமை தொடர்பில் தெளிவோடு இருக்கும் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் கிடையாது - டக்ள...
தோழர் அமீனின் இழப்பு, எமது இனத்திற்கு மாத்திரமன்றி எனக்கு தனிப்பட்ட ரீதியிலும் பாரிய வெற்றிடத்தை ஏற்...

நாட்டின் மின்வலு உற்பத்தி தொடர்பில் பொறிமுறையினை உருவாக்க இப்போதாவது முன்வாருங்கள் - நாடாளுமன்றில் ...
பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...