யாழ். பல்கலைக்கழகம் எமது மக்களுக்கு கிடைத்த அரியபொக்கிஷம் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, July 15th, 2016

பல்கலைக் கழகங்களின் தொழிற்சங்கக் கூட்டுக்கு ழுவினால் ஏழு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுக்கும் பொருட்டு கொழும்புக்கு வருகைதந்திருந்த யாழ்.பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மேற்படிசந்திப்பு நேற்றுமுன்தினம்(13) இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா ஆரம்பகாலங்களில் யாழ்ப்பாணத்தில் வளாகமொன்று நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அப்போது அதற்கான நடவடிக்கைகளை முன்னாள் பிரதமர் திருமதி       சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் முன்னெடுக்கப்பட்டபோது அப்போதிருந்த தமிழ் அரசியல் தலைமைகள் வளாகம் வேண்டாம் பல்கலைக்கழகம் தான் வேண்டுமெனக் கோரி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அந்த எதிர்ப்பையும் மீறிவளாகம் அமைக்கப்பட்டதன் பயனாக இன்று யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமாக கம்பீரத்துடன் காட்சியளிக்கின்றது என்பதுடன் எமது மக்களுக்கு கிடைத்த அரியசொத்தாகவும் விளங்குகின்றது.

அதுமட்டுமன்றி என்ன நோக்கத்திற்காக பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதோ அந்த உயரிய எண்ணத்தை ஈடேற்றும் வகையில் அனைத்துத் தரப்பினரும் உண்மையுடனும் நேர்மையுடனும் உழைக்கவேண்டும். குறிப்பாக யாழ்.பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரும் அர்ப்பணிப்புடன் சேவைசெய்ய வேண்டியதும் அவசியமானதுஎன்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாகவும்இ கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெளிவுபடுத்தினார்.

பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக்குழு ஏழு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துஇ கொழும்பு சுதந்திரசதுக்கத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பேரணியாகச் சென்றடைந்து அங்கு கல்வியமைச்சர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் மனுக்கள் கையளிக்கப்பட்டன.

கொழும்பில் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக்குழுவினால் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைநிறுத்தப்பட்ட போராட்டம் இன்றையதினம் அந்தந்த பல்கலைக் கழகங்களில் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையேஇதமது ஏழு அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்சி யானபோராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSCF1258

Related posts:

தவிர்க்க முடியாத சூழல் ஒன்றில் நாமும் அன்று  ஆயுதம் ஏந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் - நாடாளும...
பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ...
படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும்!

நிமிர்ந்தெழும் காலத்தை வெல்ல நிரந்தர ஒளியேற்றுவோம்! தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!
கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் - டக்ளஸ் ...
இலவசமாக கிடைக்கின்ற கல்வியை எமது மணவர்கள் சரியாக பெற்று தங்களை மட்டுமல்லாது தமது சமூகத்தையும் உன்னதம...