யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியின் சாதனைகள் தொடர வேண்டும்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!

Tuesday, December 27th, 2016
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி 2014 – 2016 கல்வியாண்டுக்கான தேசிய டிப்ளோமா பரீட்சையில் நூறு சதவீத சித்தியைப் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கும் நிலையில், அதன் இத்தகைய சாதனைகள் தொடர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட 2014 – 2016 கல்வியாண்டுக்கான டிப்ளோமா பரீட்சையில் ஆரம்பக் கல்வியில் 90 ஆசிரிய மணவர்களும், விசேட கல்வியில் 14 பேரும், தமிழ் மொழி மூல விஞ்ஞானத்தில் 31 பேரும், தமிழ் மொழி மூல கணிதத்தில் 13 பேரும், ஆங்கில மொழி மூல விஞ்ஞானத்தில் 11 பேரும், ஆங்கில மொழி மூல கணிதத்தில் 7 பேரும், ஆங்கிலத்துறையில் 20 பேரும் என மேற்;படி பரீட்சையில் பங்குபற்றியுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் சித்தி பெற்றுள்ளமையானது உண்மையிலேயே ஒரு வரலாற்று சாதனையாகும். இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள கல்லூரியின் பீடாதிபதி, உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் அனைவருமே பாராட்டத்தக்கவர்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதே போன்று, இன்று எட்டப்பட்டுள்ள இந்த சாதனையை தொடர்ந்து நிலைநாட்ட இவர்கள் முன்வந்து, எமது சமூகத்திற்கு இன்றைய நிலையில் பெரும் குறைபாடாக இருக்கின்ற சில முக்கிய பாடங்களுக்கான ஆசிரியப் பெருந்தகைகளை உருவாக்குவதற்கு வழிவகுக்க வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
IMG_3069-300x271

Related posts: