யாழ். தனியார் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பராமரிப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்வு!

Wednesday, May 22nd, 2024

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்து நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (22.05.2024) மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது குறித்த பேருந்து நிலையத்தின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளார்.

மேலும், பேருந்து நிலையத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்தி, மக்களுக்கும் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோருக்கும் இலகுவான போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்வது தொடர்பாகவும் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:


வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை - இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கை ...
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பிலான இடர்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்த...
தோழர் தா. பாண்டியனின் மரணம் வரலாற்றை எமக்கு திரும்பி பார்க்க வைத்திருக்கிறது – அனுதாபச் செய்தியில் ...