யாழ் சிறைச்சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – விளக்க மறியலிலுள்ள இந்தியக் மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடி உதவிப்பொருட்களும் வழங்கிவைப்பு!

Saturday, January 1st, 2022

புத்தாண்டுத் தினமான இன்று யாழ்ப்பாணம் சிறைச் சாலைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் கையளித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சுமார் 56 இந்தியக் கடற்றொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூ...
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை விரைவில் தரமுயர்த்தப்பட வேண்டும் - அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவ...
மக்களின் தெரிவுகளே எதிர்காலத் தீர்மானிக்கும்: தீவக மக்களிடம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!