யாழ் குடா கடல் நீர் ஏரியில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வெளிச்ச வீடு> இடிதாங்கி என்பன அமைக்கப்பட வேண்டும்!

யாழ் குடா கடல் நீர் ஏரியைப் பயன்படுத்தி குருநகர் பாஷையூர் கொழும்புத்துறை அரியாலை கோவிலாக்கண்டி தனங்கிளப்பு சாவகச்சேரி கச்சாய் பூநகரி நல்லூர் மண்ணித்தலை மண்டைதீவு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள் தங்களுக்கான வாழ்வாதாரங்களை ஈட்டி வருகின்ற நிலையில் இவர்களுக்கான கடற் போக்குவரத்தினை இலகுபடுத்தி பாதுகாப்பினை வழங்கும் வகையில் எவ்விதமான நவீன தொழில்நுட்ப ஏற்பாடுகளும் இல்லாதுள்ளன.
இங்கு முன்பிருந்த வெளிச்ச வீடு இடிதாங்கி என்பன சேதமாக்கப்பட்டுள்ள நிலையில,; இவை மீளப் புனரமைக்கப்படாததன் காரணமாக அண்மையில் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவத்துடன் இதுவரையில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டதாக வெளிச்ச வீடு இடிதாங்கி என்பன அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி கடந்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|