யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதியை வரவேற்றார் டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 9th, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு இன்று (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தை வந்தடைந்தார்.

Sequence 02.00_10_22_15.Still011

இதனையடுத்து யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்விவான “போதையற்ற தேசம்” என்னும்  நிழ்வில் கலந்துகொள்ளும் முகமாக அங்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு வருகைதந்திருந்த ஜனாதிபதிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களும் அதிகாரிகளும் சிறப்பான வரவேற்பளித்தனர்.

14273445_1168745093199056_1744773596_o

அதனைத் தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரியின் 200  ஆவது ஆண்டு நிறைவு தின சிறப்பு நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து  தொடர்ந்து  துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தையும் அவர் திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1)

14256614_1168747659865466_1440979833_n

625.0.560.320.500.400.197.800.1280.160.95

Related posts:

யாழ்.வசந்தபுரம் பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!
தவறான தீர்மானங்கள் எமது மக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தேவையான நடவடிக்...
நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்க...