யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிற்சிக் கூடம் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் திறந்து வைப்பு!

Thursday, October 12th, 2023

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்  உடற் பயிற்சிக் கூடம் நேற்றையதினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் நடாவெட்டி திறந்து வைக்கப்பட்டதுடன் நினைவுக் கல்லும் திரைநீக்கம் செய்யப்பட்டது.

உடற்பயிற்சி கூடத்திறப்பு விழா கல்லூரி அதிபர் சி.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் றணசிங்க, வடமாகான கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன்

கல்வி துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள்,வேம்படி மகளிர் கல்லூரி உயர்தரப்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: