யாழ்ப்பாணம் – புத்தளம் மீனவர் கூட்டுறவுசங்கங்களின் ஊடாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விசேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

மீனவர் கூட்டுறவுச் சங்கங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை உள்வாங்கி அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விசேட திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் முதற் கட்டமாக யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.
பேலியகொட சந்தை நம்பிக்கை சபை உறுப்பினர்கள் மற்றும் இலங்கை வங்கி அதிகாரிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அமைச்சின் செயலாளர் உட்பட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (28.11.2019) அமைச்சில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பிலே மேற்படி விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் குறித்த திட்டத்தினை செயற்படுத்துவதற்கு இலங்கைவங்கியின் ஒத்துழைப்பை எதிர்பார்;ப்பதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா தெரிவித்தார்.
கடற்தொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற கொழும்பு பேலியகொட மீன் சந்தையை புனரமைப்புச் செய்து வர்த்தகர்களுக்கும் நுகர்வோர்களுக்;கும் தேவையான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும்; இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், பேலியகொட மீன் சந்தையில் காணப்படும் பிரச்சினைகளில் உடனடியாக தீர்வு காணக்கூடிய விடயங்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில், பேலியகொட மீன் சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், மீன் சந்தையில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பாக நேரடியாக ஆராய்ந்திருந்த நிலையில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|