யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன்? – டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, March 15th, 2019

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வசதியின்மைகள் தொடர்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது பல்வேறு வசதியின்மைகளுக்கு மாணவர்கள் முகங்கொடுத்து வருவதாக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் அண்மையில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்திருந்தனர்.

விடுதி வசதி இன்மைகள், விளையாட்டு மைதான குறைபாடுகள், விரிவுரை மண்டபங்களில் காணப்படுகின்ற குறைபாடுகள் என பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் கூறப்படுகின்றது. இவை தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானமெடுப்பார் என நம்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அதேநேரம், கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களது காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேலும் சில முக்கியத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

அந்த வகையில், தாதியர் கற்கை நெறிக்கான பதிவும், அங்கீகாரமும் இன்னும் அங்கு இல்லாத நிலை காணப்படுகின்றது. சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த ஏற்பாட்டை அமைச்சர் அவர்கள் செய்து தர வேண்டும்.

அதேபோன்று இந்து மத கற்கை நெறிக்கான பீடமொன்றினையும், கடல் தொழில் சார்ந்த ஒரு பிரிவினையும் யாழ் பல்கலைக்கழத்தில் நிறுவுவதற்கும் அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு,

வவுனியாவில் பல்கலைக்கழகமொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற எமது நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றப் போவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.


வடக்கில் தென்பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவும்! - டக்ளஸ் தேவானந...
குருநகர் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!
நெடுந்தீவில் பணிபுரியும் அரச அதிகாரிகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் - நாடாளும...
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எமது  செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெர...
ஓய்வுக்கு பின்னரும் ஓய்வின்றி உழைத்த சமூகப்பற்றாளன் சவுந்தரராஜா – அஞ்சலி உரையில் செயலாளர் நாயகம் டக்...