யாழ்ப்பாணம் நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தை திறந்துவைத்து சேவைகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 27th, 2021

யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில்  அமைக்கப்படுள்ள நெடுந்தூர தனியார் பேருந்து நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்றையதினம் (27) மக்கள் பாவனைக்காக அதிகாரபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களிற்கு செல்லும் தனியார் பேருந்துகள் தரித்து நிற்பதற்கு உரிய இடம் இல்லாமல் இருந்துவந்த நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்றையதினம் குறித்த நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்து சேவைகளை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக பல வருடங்களாக யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியின் வைத்தியசாலை பின் பகுதியிலேயே வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்துகள் தரித்திருந்து தமது சேவைகளை முன்னெடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

குடாநாட்டில் அதிகரித்துவரும் தொழிலின்மைப் பிரச்சினையே சமூக சீர்கேடுகளுக்கான பிரதான காரணமாக விளங்குகி...
13 ஐ கோட்டபய ஏற்றுக்கொள்வார்: தமிழ் மக்களுகளின் பிரச்சினைகளுக்கு அதனூடாகவே தீர்வு - டக்ளஸ் எம்.பி...
மண்கும்பானில் பாரிய படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினால் அங்குரார்ப்பணம்!