யாழ்ப்பாணம் கிடாய்விழுந்தான் வீதி பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Sunday, February 12th, 2017

யாழ்ப்பாணம் வண்ணை சிவன்கோயிலுக்கு உரித்தான கிடாய் விழுந்தான் வீதி பகுதியில் நீண்ட காலமாக வசித்துவரும் தாம், குறித்த காணிகளுக்கான உரிமம் இன்மையால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுவருவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (12) டக்ளஸ் தேவானந்தவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சிவன் கோயில் கிடாய் விழுந்தான் வீதி  பகுதி தற்போது பருத்தித்துறை வீதி முதலாம் ஒழுங்கை என்ற பெயரில் அழைக்கப்பட்டுவருகின்றது.

34 பரப்புகளைக் கொண்ட இப்பகுதியில் 25 க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பல சந்ததிகளாக வாழ்ந்தவரகின்றனர்.

இருந்தபோதிலும் குறித்த பகுதி மக்கள் இதுவரைகாலமும் காணிகளை தமக்கு உரிமமாக்காத காரணத்தினால் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவித்திட்டங்களை பெற்றுக்கொள்ளமுடியாமலுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நீதியானதும் நியாயமானதுமான அடிப்படையில் காணி உரிமத்தை பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்தள்ளனர்.

இது தொடர்பில் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத்தருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

DSCF0206

Related posts:

நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வறுமையற்ற பகுதிகளாக மாற்றம் பெற வேண்டும் என்பதே எமது அபிலாஷை - டக்ளஸ் ...
பருத்தித்துறை, பேசாலை, குருநகரிலும் விரைவில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படும் - அந்தந்த பிரதேச...
குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக கட்சி நிதியிலிருந்து ஊதியம் வழங்கும் வகையில் இரு சிற்றூழியர்கள...

நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எ...
மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான நிதியை விடுவிப்பதற்கு ஏ...
மக்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்படும்: கிளிநொச்சி மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ்!