யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் 600 வீட்டுத் திட்டம் – இறுதிப் பட்டியல் காட்சிப்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, May 5th, 2023

யாழ். மாவட்டத்தில் இவ் வருடம் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்காக 600 வீட்டு திட்டம் வழங்கப்பட்டுவதாக யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் முரளிதரன் (காணி) தெரிவித்த நிலையில் இறுதிப் பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட விடையதானங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் முரளிதரன் வீட்டு திட்டம் தொடர்பில் விளக்கம் அளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலதிக அரச அதிபர் முரளிதரன் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் வீடு திட்டங்கள் 379, ஆறு இலட்சம் ரூபாய் வீட்டு திட்டம் 221 ம் வழங்கப்படவுள்ளது.

யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவிலும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட அதாவது நலம்புரி நிலையங்களில் இருந்தோர் விசேட தேவையுடையவர்கள், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட குடும்பங்கள் ஆகியவை முன்னுரிமைப் படுத்தப்படுகிறது.

எனினும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படாத நிலையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டதும் அதனை உரிய இடங்களில் காட்சிப்படுத்துமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நட்டின் அனைத்து நபர்களுக்கும் என சமமானதுமான ஒரு வரிக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும்  - நாடாளுமன்றி...
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூ...
கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணசபையில் எதுவும் நடக்கவில்லை -  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...

முன்னாள் போராளிகளின் கடன் இரத்தாகும் : டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க காரணங்களை கூறவேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
தனியார் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களது நலன்கள் கவனத்தில்; கொள்ளப்பட வேண்டும் - நாடாளும...