விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத் தூதருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பாராட்டு!

Monday, February 26th, 2018

விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத்தாதர் ஆர் நடராஜன் அவர்களுக்ககு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்.

யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரிவுபசார நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் போதே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்தியத் துணைத்தூதருக்கு நினைவுப்பரிசில் வழங்கிக் கௌரவித்தார்.

இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜா எதிர்வரும் மார்ச் மாதம் தனது சேவைக் காலத்தினை நிறைவுசெய்து இந்தியா டெல்லிக்கு திரும்பவுள்ள நிலையில், அவரது சேவையினைப் பாராட்டி பிரியாவிடைநிகழ்வும்  கௌரவிப்பும் இடம்பெற்றது.

கடந்த நான்கு ஆண்டுகளாக யாழ்ப்பாண துணைத்தூதரகத்தில் கடமையாற்றிய சமையம் வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் பல உதவித்திட்டங்களையும் வளர்ச்சிப்பணிகளையும் அவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு துணைத் தூதுவரை கௌரவித்ததுடன், தமது நினைவுப் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

IMG_2412 copy

Related posts:

சட்டவிரோத மண் விநியோகத்தை ஊக்குவிப்பவர்களே துன்னாலை இளைஞனின் மரணத்திற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.
குடாநாட்டில் முடங்கிக் கிடந்த கூட்டுறவுத் துறையை கடும் உழைப்பினால் தூக்கி நிறுத்தியவர்கள் நாம் - நாட...
சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு நல்லாட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வ...
நீண்டகாலமாக இருந்து வந்த பாரிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது – வணிக கப்பற்றுறை கப்பற்று...
கொரோனா தடுப்பூசி வழங்கு நிலையங்களை நேரில் சென்று கண்காணிக்கும் அமைச்சர் டக்ளஸ் – மக்களுக்கு தடுப்பூச...