யாழ்ப்பாணத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு விளையாட்டு மைதானம் அமையப் பெற வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, May 22nd, 2019

பாடசாலைகள் மட்டத்தில் கிரிக்கெற் விளையாட்டில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்ற பொருளாதார வசதி கொண்ட மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகியதும், கிரிக்கெற் கழகங்களில் இணைந்து தங்களது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள இயலும் என்கின்ற போதிலும், பொருளாதார வசதிகள் குறைந்த மாணவர்களும், ஏனைய விளையாட்டுத் துறைகளில் ஆர்வங் கொண்டுள்ள திறமையான மாணவர்களும் பாடசாலையை விட்டு விலகியதும், அவர்களால் மேற்கொண்டு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இல்லாது போய் விடுகின்றன நாடாளுமன்றில் நடைபெற்ற 2013ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க விளையாட்டுத்துறையில் ஊக்குவிப்பு பதார்த்த பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அதே போன்று, தேசிய விளையாட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. நாட்டில் பல்வேறு மாகாணங்களிலும் மாறி, மாறி வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த தேசிய விளையாட்டு விழாக்களில் மாகாண மட்டங்களிலிருந்து கலந்து கொண்டு மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்துகின்ற பல வீரர்கள், வீராங்கனைகளை அந்தந்த விழாக்களுக்குப் பின்னர் விளையாட்டுத் துறையில் காண முடியாத ஒரு நிலை தொடர்வதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய திறமையான வீரர்களை – வீராங்கனைகளை தேசிய மட்டத்திலிருந்து சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு நீங்கள் இதுவரையில் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளீர்கள்? என்ற கேள்வி எழுகின்றது.

ஒவ்வோரு நாளும் ஊடகங்களைப் பாரக்கின்றபோது, மிகச் சிறந்த திறமைகளை பல்வேறு விiயாட்டுத் துறைகள் சார்ந்து கொண்டிருக்கின்ற பலரும், தங்களது ஆற்றல்களை மேலும் வளர்த்துக் கொள்வதற்காகவும், ஆடைகள் மற்றும் பாதணிகள் வாங்குவதற்காகவும் தோட்டங்களிலே புல் வெட்டுகின்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றதையும், மரம் ஏறி தேங்காய் பறிக்கின்ற தொழிலில் ஈடுபட்டு வருகின்றதையும் காணக் கூடிய இருப்பது மிகவும் வேதனையான விடயமாகும்.

சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு நிதி இல்லாமல் பலரிடம் நிதி சேகரிக்கின்ற நிலைக்கும் இவ்வாறான வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறெல்லாம் கஸ்டப்பட்டு, பாரிய இடையூறுகளுக்க மத்தியில் தங்களது சொந்த முயற்சியில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கின்ற ஒரு சிலர் கூட வெற்றிகளுடன் நாடு திரும்புகின்ற நிலையும் காணப்படுகின்றது.

நீங்கள் பாரியளவு நிதி செலவு செய்து சர்வதேச போட்டிகளுக்கு அனுப்புகின்ற பலரும் வெறும் கையுடன் திரும்பி வருகின்ற சந்தர்ப்பங்களே ஏராளமாக இருப்பதையும் காண முடிகின்றது.

எனவே, இந்த நாட்டின் விளையாட்டுத் துறையினை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனில், இத்தகைய பல்வேறு துறைகள் தொடர்பிலும் உரிய அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும் என்பதை இங்கு வலியுறத்த விரும்புகின்றேன். அதற்கு முதல், விளையாட்டுத் துறைக்கென ஒரு தேசிய கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் அனைத்து வசதிகளையும் கொண்டதான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட வேண்டியத் தேவைகள் இருக்கின்றன. சுகததாச விளையாட்டரங்கை விடுத்துப் பார்த்தால், அத்தகைய வசதிகளைக் கொண்ட இன்னொரு விளையாட்டு மைதானம் நாட்டில் இல்லை.

யாழ்ப்பாணத்தில் இத்தகைய ஒரு விளையாட்டு மைதானம் அமையப் பெறும் என்று கடந்த காலங்களில் கூறப்பட்ட போதிலும், கிளிநொச்சியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட மைதானத்தின் தரம் தொடர்பிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில், இந்த நாட்டின் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதில் பாரிய படிப்பினைகள் உள்வாங்கப்பட்டு, அவை செயல் வடிவங்கள் காணவேண்டும் என்பதையே மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

Related posts:

வடக்கில் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலை மேற்கொள்ள வழிசமைத்துக் கொடுத்தவர்கள் நாம் - பாஷையூரில...
‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாதர் நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்ட அங்குரார்ப்பண நிழ்வு ய...

யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறைக்கென   தனியான ஒரு  பீடம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்...
காரைநகர் சீனோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் தரமுயர்த்தப்பட்டு பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்...
கடற்றொழில் - நீர் வேளாண்மை விருத்திக்கு இருதரப்பு ஒப்பந்தம் - வியட்நாம் தூதுவருடன் கடற்றொழில் அமைச்ச...