யாழில் சமூக விரோதிகளை இயக்கியது யார்? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, November 12th, 2016

 

சமூக விரோதிகள் எப்படி தங்களை வெள்ளை உடுப்புக்குள் மறைத்துக் கொண்டாலும் ஒருநாள் அது தொடர்பான உண்மைகளும் வெளிவரும் என்றே வரலாறு பதிவிட்டுச்செல்கின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் சமூகவிரோத குழக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது –

யுத்தத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த இயல்புச் சூழலையும், அமைதியையும் பாதிக்கும் வகையிலும் சவால்கள் நிறைந்த பொருளாதார மீள் எழுச்சியை பாதிக்கச் செய்யும் வகையிலும் வாள் வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகளும், போதைப் பொருட்களின் விநியோகங்களும் அமைந்திருக்கின்றன.

வாள் வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்தபோது அதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்ற கேள்விகள் எழுந்திருந்தன.தற்போது வாள் வெட்டுக் குழுவின் உறுப்பினர்கள் என்று சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் அவர்களில் முக்கியமானவர் தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் என்று தெரியவந்திருக்கின்றது.

ஏற்கனவே பொது நிகழ்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்துகின்ற சிலர், தமிழ்த் தேசிய முன்னணிக்கு ஆதரவான செயற்பாடுகளை வெளிப்படுத்தி வந்திருந்ததுடன் குண்டர் குழுக்களாகவும் செயற்பட்டு கூட்டங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக குற்றங்கள் சாட்டப்பட்டிருந்தது.

அன்மையில் யாழ்ப்பாணத்தில் அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்வின் போது தமிழ் அரசியல்வாதிகள் உரையாற்றும்போது கூட்டத்தின் நடுவே இருந்து கேள்விகள் கேட்பதாகவும், கூச்சல் குழப்பங்களை எழுப்புவதாகவும் செயற்பட்ட இந்த குண்டர் குழு, அவர்களின் கட்சித் தலைவர்கள் உரையாற்றியபோது கைகளைத் தட்டி ஆர்ப்பரித்திருந்தனர்.

அப்போதே அந்தக் குண்டர்களை திட்டமிட்டே அந்தக் கட்சியினர் கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்கின்றார் என்றும், எழுக தமிழ் நிகழ்வின்போதும், ஏனைய ஆர்ப்பாட்டங்களின்போது தமிழ்த் தேசிய முன்னணியை முன்னிலைப்படுத்துவதிலும், பிரபலப்படுத்துவதிலும் இவர்கள் குண்டர் குழுவாக முன்னின்று காணப்பட்டதாகவும் பலரும் விசனம் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் அமைதியை சீர்குலைப்பதன் ஊடாகவும், வன்முறைகளை தோற்றுவிப்பதன் ஊடாகவும் தமது அரசியலை முன்னெடுக்கவும், ஏனைய கட்சிகளின் அரசியல் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தவும், அவர்கள் மீது அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுக்கவும் இதுபோன்ற சமூக விரோதக் குழுக்களை இவர்கள் திரைமறைவிலிருந்து நடத்திவந்திருக்கின்றனர் என்ற உண்மை இன்று அம்பலமாகியிருக்கின்றது.

இந்த நிலையிலேயே தற்போது ஆவா குழுவின் முக்கியஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்றும் அவர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய முன்னணியைச் சேர்ந்த 29 வயதுடைய அன்ரனி தாஸியஸ் அரவிந்தன் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் தலைமையில் வேறொரு வாள் வெட்டு சமூக விரோதக் குழுவொன்றும் யாழ்ப்பாணத்தில் இயங்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தன்னை அடுத்த பிரபாகரன் என்று வர்ணிப்பதுடன் கிளிநொச்சியில் முன்னாள் போராளிகள் மரணமானதாக செய்தி அறியக் கிடைத்தால் அங்கே வெள்ளையும் சொள்ளையுமாக வந்து நின்று தலை கவிழ்ந்து கொண்டு நிற்கிறார்.

சமூக விரோதிகள் இப்படி தங்களை வெள்ளை உடுப்புக்குள் மறைத்துக் கொண்டாலும் ஒருநாள் அது தொடர்பான உண்மைகளும் வெளிவரும் என்று எதிர்பார்ப்போம்.

IMG_3069.

Related posts:

E.P.D.P.யின் வடக்கு – கிழக்கு பிராந்திய முக்கியஸ்தர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையி...
ஈழமக்கள் ஜனநாய கட்சியின் செயலாசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பங்கேற்புடன் இந்துக்களுக்கான...
வடக்கு கிழக்கில் காணப்படும் காணி பிரச்சினைக்கு பாதீட்டின் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் - நம்பிக்...

நீருக்கான தட்டுப்பாடு நிலவும் நமது நாட்டில் இயற்கை நீர் வளங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்...
வடக்கின் விவசாய பண்ணைகளில் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்பு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்த...
காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர...