யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள விஷேட நடவடிக்கை!

Wednesday, October 7th, 2020

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவாமல் தடுப்பதற்கு வடபகுதி கடலில், கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக தடை செய்ய கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்திய மீனவர்களுடன் சுழியோடிகள் தொடர்பினை கொண்டுள்ளதால் யாழ்ப்பாண தீபகற்ப மக்களிடையே கொரோனா தொற்றுநோய் பரப்புவதற்கான கடுமையான ஆபத்து காணப்படுவதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.

முதல் கொரோனா அலையின் போது இதுபோன்ற எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை. யாழ்ப்பாண தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் கடல் அட்டைகள் மற்றும் மட்டிகள் சேகரிக்க மீன்வள மற்றும் நீர்வளத் துறை சிறப்பு சுழியோடும் அனுமதியை வழங்கியுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தால் யாழ்குடா நாட்டின் மேற்குக் கடற்கரையில் கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்கள் சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுழியோடிகள் குறித்த கடற்கரையில் தற்காலிகமாக வசித்துக் கொண்டு அவற்றில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நடவடிக்கைகளுக்காக அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள சில சுழியோடிகள் குறித்த அனுமதியை மீறி இழுவைப்படகு முலம் கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களுடன் சட்ட விரோதக் கடத்தல்களில் ஈடுபடுவதாக் தெரிய வந்துள்ளது.”

இதன் காரணமாக, யாழ்ப்பாண தீபகற்ப மக்கள் மத்தியில் கொரோனா தொற்றுநோய் பரவ அதிக ஆபத்து காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்கள் சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக தடை செய்வதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

புனர்வாழ்வுபெற்ற போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு சலுகை அடிப்படையிலான வங்கிக்கடன் - டக்ளஸ் தேவான...
தமிழ் தலைவர்கள் விட்ட தவறுகளே எமது மக்களது இன்றைய நிலைமைகளுக்கு காரணம் - டக்ளஸ் தேவானந்தா!
தனக்கென ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்ட டக்ளஸ் - சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாத...