யதார்த்த அரசியல் தீர்வுகளுக்காக புதிய கூட்டு!

Tuesday, March 29th, 2016

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியின் இல்லத்தில்  தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.

கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளதாவது –

தற்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அரசியல் உரிமை நிலைப்பாடுகளை பொதுப்பார்வையாக ஆராய்ந்து ஒரு நிலையான, யதார்த்தமான நீதியான அணுகுமுறைகளூடாக  இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றது.

மாறாக, எவருக்கும் எதிரான  அல்லது போட்டியான ஒரு அரசியல் கூட்டாக இதனை நாம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

புதிய அரசு பதவிக்கு வந்து பலமாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மக்களது நீடியநாள் தேவையான விடயங்களும் நிரந்தரமான அரசியல் தீர்வுகளுக்கான ஆரோக்கியமான பாதைகளும் வேகம் குறைந்துகொண்டதாக செல்கின்றது.

அரசுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி ஒரு நிரந்தரமான பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தவதற்கான ஜதார்த்தபூர்வமான வெளிப்படையான ஒரு நிலைமையை உருவாக்குவது தான் இந்த சந்திப்பின் நோக்கம்.

இந்த நிலைப்பாட்டைக் கொண்டவர்கள்  தனித்தனியாகவும் கூட்டாகவும் இணைந்து கதைப்பதால் ஒரு இணக்கப்பாட்டை உருவாக்கிக்கொள்ளவும்  முகமாகத்ததான் இது அழைக்கப்பட்டுள்ளது.

பதிய அரசாங்கம் சரியான திட்டங்களுடன் ஆரம்பித்திருந்தாலும் தமிழ் மக்கள் தரப்பில் சரியான ஒரு அரசியல் அணுகுமுறையை கொண்ட அமைப்பை உருவாக்கிக்கொள்ள இந்த கூட்டில் நாம் ஒருமித்து பேசியுள்ளோம். இதனூடாக தமிழ் மக்களது அரசியல் விடயங்களில் ஒரு நேர்மையான யதார்த்தமான போக்கையுடைய அனைவரையும் இணைத்துக்கொண்டு தமிழ் மக்களது நிரந்தர அரசியல் தீர்வுக்கான பாதையில் பயணிக்க தயாராக இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் எதிர்வரும் 8ஆம் திகதி கூடி கலந்துரையாடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, ஈரோஸ் கட்சியின் தலைவர் பிரபாகரன் உட்பட வேறு சிலரும் பங்குபற்றியுள்ளனர்.

Related posts:

இரு மொழிகள் அமுலாக்கம் எழுத்து மூல ஆவணமாக இருக்கின்றதே அன்றி அரச செயற்பாட்டு வடிவத்தினைப் பெற இன்னும...
வரவு செலவுத் திட்டத்தைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்குகின்ற நிலைமை மாற்றப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி !
அமைச்சர் டக்ளஸ் - திருமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திப்பு - பல்வேறு தொழில்ச...

வடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது - நாடாளுமன்றில் டக்ளஸ...
மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய பக்தர்களுடன் கச்சத்தீவு திருவிழா ஆரம்பம் –இருதரப்பு உறவுகளை வலுப...
யாழ் மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அமைச்சர்களான சுசில் மற்றும் டக்ள...