மேய்ச்சல் தரையை பாராமரிக்க நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தோவனந்தா கோரிக்கை!

Friday, February 8th, 2019

தற்போது நாட்டில் கால்நடைகள் வளர்ப்பு தொடர்பில் எதிர்நோக்கப்படுகின்ற மிக முக்கியப் பிரச்சினையானது மேய்ச்சல் தரைகளின்மையாகும். மேய்ச்சல் தரைகள் உரிய முறையில் இல்லாத காரணத்தினால் தற்போது நாட்டில் சில பகுதிகளில் கால்நடைகள் அடிக்கடி இறந்துவிடுகின்ற நிலைமைகளும் தொடர்கின்றன. இந்த வகையில் 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் அண்மைக்காலமாக இறந்துள்ளன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தோடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நாட்டில் பாலுற்பத்தியை மேலும் பரவலாக விருத்தி செய்ய வேண்டுமானால், தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபைக்கு அது தொடர்பில் நிறையவே பொறுப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் பால் மாவுக்கு பழக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூட இறக்குமதி பால் மா  தொடர்பில் மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இத்தகைய நிலையில் தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையானது சில நல்ல பயனுள்ள பணிகளை ஆற்றிவருகின்ற அதேவேளை தேசிய கால்நடைகள் அபிவிருத்தி தொடர்பில் மேலும் பல  ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஏடுத்தால், இந்த நாட்டின் நுகர்வுத் தேவையில் போதியளவினை ஈடுசெய்ய முடியும் என்பதுடன், இத்தகைய சர்ச்சைகளுக்குரிய பால் மா வகைகளுக்கு சிறந்த மாற்றாக எமது உற்பத்திகளைக் கொண்டு வர முடியும்

அதற்கேற்ப வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் புற்தரைகளை அமைத்து, பராமரித்து, பருவ காலநிலைகளுக்கு ஏற்ப அவற்றைப் பதப்படுத்தி எக்காலத்திற்கும் ஏற்ற வகையிலான பயன்களை கால்நடைகளுக்கு வழங்குவதற்கான எற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதேநேரம், மகாவலி அபிவிருத்தித்  திட்டமானது வடக்கு மாகாணத்தை நோக்கி வருமாக இருந்தால், அதன் மூலமாக எமது பகுதியில் மூன்று போக பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டும், கால்நடை உற்பத்தி அபிவிருத்தியினை முன்னெடுத்தும், அந்த மாகாணத்திற்கு மட்டுமன்றி, முழு நாட்டுக்கும் பெரிதும் பயனுள்ளதான பொருளாதார ஈட்டல்களை மேற்கொள்ள முடியும் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்

Related posts:

அதிகாரத்தை தாருங்கள் : நான் உங்கள் எதிர்காலத்ததை வென்றெடுத்துத் தருவேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!...
வதிரி மெ.மி.த.க பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாடசாலை கல்விச் சமூகம்...
அனர்த்த முகாமைத்துவ அரச நிதியை நிவாரணமாக வழங்க தீர்மானம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாட்டை மட்டுமல்ல தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்துவிட்டது – நாடாளுமன்றில்...
மண்கும்பானில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு...