முல்லை வேட்பாளர்களுடன் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Friday, December 15th, 2017

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பை மேற்கொள்ளும் பொருட்டு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி குறித்த தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டத்திலும் தனித்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பங்கெடுக்கும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு புதுக்குடியிருப்பில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சுியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலளர் ஜெயராஜ் (கிருபன்) உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

IMG_20171215_101010 IMG_20171215_101204

Related posts:


குருநகர் பகுதி மக்களது காணி உரிம பிரச்சினை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா எடுத்த  முயற்சிக்கு நீதி அமைச்...
பொலித்தீன் விவகாரம் தொடர்பில் கிராமப்புறங்களையும் திரும்பிப் பாருங்கள் - நாடாளுமன்றில் செயலாளர் நாயக...
மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் - நாடாளுமன்றில் ட...