முல்லை இரட்டை வாய்க்கால் களப்பு பகுதியின் நிலைமை குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Thursday, November 4th, 2021

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரட்டை வாய்க்கால் களப்பு பகுதியை பார்வையிட்டதுடன் அங்கு தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்

இதேவேளை முல்லைத்தீவு, நந்திக்கடல் களப்பினையும் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, களப்பு அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நந்திக்கடலில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கான ஏதுநிலைகள் தொடர்பாக நேரில் ஆராய்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: