முல்லைத்தீவுமாவட்ட உதைபந்தாட்ட லீக் இறுதிப்போட்டியில் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்று சிறப்பிப்பு!

Wednesday, November 9th, 2016

முல்லைத்தீவு மாவட்ட கேப்பாபிலவு கிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடத்திய  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமாகிய டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்தகொண்டு சிறப்பித்துள்ளார்.

நேற்றையதினம் DDTV யின் ஊடக அனுசரணையுடன்  முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் ஒழுங்கு செய்யப்பட்டு கேப்பாபிலவு கிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடத்திய  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் செல்வபுரம் யூட்ஸ் விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

செல்வபுரம் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற குறித்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் பிரதம விருந்தினராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன் பங்கேற்ற இரு அணி வீரர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

கொட்டும் மழைக்கு மத்தியில் நடைபெற்று இறுதிப்போட்டியில் முள்ளியவளை மாமூலை விண்ணொளி விளையாட்டுக்கழகத்திற்கு எதிராக விளையாடிய செல்வபுரம் யூட்ஸ் விளையாட்டுக் கழகம் 6 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

05

04

09

10

07

06

08

Related posts:

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் புதிய சிற்ப தேரின் வெள்ளோட்டம் இன்று: டக்ளஸ் எம்.பி. கலந்து சிறப்ப...
தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான விஷேட பதிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஹெகலிய ரம்புக்...
அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவுடன் அவசர சந்திப்பை மேற்கொண்ட கூட்டமைப்பின் MP செல்வம் அடைக்கலநாதன்!