முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
Wednesday, April 17th, 2024முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதுதொடர்பான அறிக்கை ஒன்றை இரண்டு வார காலத்தில் சமர்ப்பிக்குமாறும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்புக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அவர்களுக்கும் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்ககளின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் அதிகமாக மேற்கொள்ளப்படும் வெளிச்சம் பாச்சி மீன் பிடியில் ஊடுபடுவதினால் சிறுதொழிலில் ஈடுபடுகின்ற தாங்கள் பாதிக்கபடுவதாக முறையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் ...
சுதேச மருத்துவச் சட்டமூலம் அமைச்சர் டக்ளசின் ஆட்சேபனையால் கைவிடப்பட்டது. ~~~~
நீண்டகால முயற்சி – தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது பயணிகள் கப்பல் - அமைச்சர்களான டக்ளஸ் தே...
|
|