முல்லைத்தீவில் கருவாட்டு தொழிற்சாலையை இயக்குவதற்கு அமைச்சர் தேவானந்தா நடவடிக்கை!
Monday, November 2nd, 2020முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தின் கருவாட்டு தொழிற்சாலையின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கொவிட் 19 காரணமாக கருவாட்டுஉற்பத்தி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று(02.11.2020) சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, தொழிற்சாலை கொறோனா தொற்று நீக்கப்பட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகின்ற இயந்திரத்தின் ஊடாக ஐந்து மணித்தியாலங்களில் சுமார் 400 கிலோ கிராம் கருவாடு உற்பத்தி செய்ய முடியும்.
இந்நிலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற கருவாடுகளை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் ஊடாக கொள்வனவு செய்து சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக சந்தைப்படுத்துவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|