முற்கொம்பன் கிராமத்தை சேர்ந்த 60 குடும்பங்களுக்கான காணி அனுமதிப் பத்திரத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைப்பு!

Saturday, October 1st, 2022

முற்கொம்பன் கிராமத்தை  சேர்ந்த 60 குடும்பங்களுக்கான காணி அனுமதிப் பத்திரத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் குறித்த கிராம விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த காணி உரிமங்களை வழங்கிவைத்ததுடன் கிராம மக்களின் கோரிக்கைகளில் ஒன்றான பிரதான வீதிகள் மூன்றையும் புனரமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்

அத்துடன் முற்கொம்பன் மகா வித்தியாலயத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை ஈ.பி.டி.பி. கட்சியின் நிதி உதவியின் அடிப்படையில்  உடனடியாக  நியமிப்பதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்

ஒரு சில தனியாரின் ஆதிக்கச் சுரண்டலில் இருந்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீட்கப்பட்டு காணிகளற்ற ஏழைக் குடும்பங்களின் பசி தீர்க்க பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணியில்  2022 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கையும்நேற்ரைறயதினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது உழுது பதப்படுத்தப்பட்ட வயல் நிலத்தில் பெரும்’போக விளைச்சலுக்கான நெல் மணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் அவரது பிரதிநிதியான  கடற்றொழில் அமைச்சரின் மேலதிக இணைப்பாளர், கோடீஸ்வரன் றுஷாங்கன் சம்பிரதாயபூர்வமாக வயலில் விதைத்து ஆரம்பித்துவதத்து வைத்திரந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நாட்டில் மதுபான உற்பத்திக்கு அரிசியைவழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது- ந...
நாம் ஆற்றிய பணிகளை தாம் ஆற்றியதாக உரிமை கோருவது கையாலாகாத்தனம் -  டக்ளஸ் எம்பி. சுட்டிக்காட்டு!
பொருளாதார ரீதியான அபிவிருத்தி சகல மட்டங்களுக்கும் பரவ வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் எதிர்பார்ப்பு!