முருகண்டி ஆலயத்தின் புனரமைப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Saturday, November 24th, 2018

முருகண்டி ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் ஆலயச் சூழலில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற பல கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இன்றையதினம் நடைபெற்ற குறித்த சந்திப்பில் இந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், ஆலய சூழலில் இருக்கும் கடை உரிமையாளர்கள், ஆலய பரிபாலன சபையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

viber image viber image0 viber image3 viber image4 viber image5 viber image25 viber image55 viber image2

Related posts: