முப்படைகளிலும் தமிழரது பிரதினி தித்துவம் உறுதிப்ப டுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுளேன்

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் பிரகாரம் முப்படைகளிலும் தமிழரது பிரதிநிதித்துவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
புங்குடுதீவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இந்நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என இருவேறு இனத்தவர்கள் வாழ்ந்துவரும் நிலையில் அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்களின் இன விகிதாசாரத்திற்கு அமைவாகவே முப்படைகளிலும் பிரதிநிதித்துவம் இருத்தல் வேண்டும்.
கடந்தகாலங்களில் இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படாத காரணத்தினாலேயே நாட்டில் இன நல்லிணக்கம் பாதிக்கப்படுவதற்கு வழிகோலியது. எனவே கடந்தகால படிப்பினைகளைக் கருத்தில்கொண்டு இன்றுள்ள இயல்புச் சூழலைப் பாதுகாத்து இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு படைத்தரப்பில் இனவிகிதாசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக நாட்டின் முப்படைகளிலும் தமிழர்களது பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டியது முக்கியமானது என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
இதன்போது மக்களது தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் முன்னெடுக்கப்படக்கூடியதான சுயதொழில் மற்றும் சிறுதொழில் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றுக்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்..
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் ஞானமூர்த்தி உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.
Related posts:
|
|