முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 27th, 2023

எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேலும் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவையை விரிவுபடுத்துவதுடன் பொருளாதார ரீதியிலும் அவர்களை தூக்கி நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும்  என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இற்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது தேவைகள்  குறித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார் .

இதன்போது பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் நீண்ட காலமாக முன்பள்ளிச் சிறார்களின் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருக்கும் நிலையில் இதுவரையில் குறைந்த ஊதியத்தில் கடமையாற்றுவதுடன் இதனால் தாம் குடும்ப சூழ்நிலையில்  பல்வேறு அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டுவருவதாகவும் தெரிவித்ததுடன் நாட்டில் ஏனைய பிரதேசங்களில்   முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைக்கின்றன வாய்ப்புகள் போல் தமக்கும் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தரமாறும் அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அ...
யாழ்ப்பாணத்தில் “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
தனங்கிளப்பில்இறால் வளர்ப்பை ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்!

எனது முயற்சியால் கிடைக்கப்பெற்ற இந்தியன் வீட்டுத் திட்டத்தை உரிமை கோர எவருக்கும் அருகதை கிடையாது - ட...
தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத...
ஊர்காவற்றுறை உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை சோதனைக்குட்படுத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகளுக்க...