மீன் வள ஆய்வுகளை மேற்கொள்ள கடற்றொழில் அமைச்சு – இலங்கைக்கான நோர்வே தூதரகம் இணைந்து நடவடிக்கை!

Tuesday, April 20th, 2021

இலங்கை கடற் பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கான  இணைந்த வேலைத் திட்டம் ஒன்றை கடற்றொழில் அமைச்சு மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதரகம் ஆகியன ஆரம்பித்துள்ளன.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரைன் ஜோன்லி ஸ்கெண்டல், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்னாயக்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts: