மீன்பிடிக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவசர கலந்துரையாடல்!
Thursday, March 26th, 2020கொராணா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையில் மீன்களை கொள்வனவு செய்து குளிரூட்டிய அறைகளில் பாதுகாத்து மக்களின் தேவைக்கேற்ப விநியோகிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீன்பிடிக்கூட்டுத்தாபன அதிகாரிகளை பணித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது மீன் கொள்வனவு மற்றும் அதைப்பதப்படுத்தி மக்களுக்கு விநியோகம் செய்தல் என்பவற்றுக்கு உடனடியாக 60 கோடி ரூபா மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்கு தேவை என்ற கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்தார்.
அந்தக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும், அமைச்சரவையும் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு 60கோடி ரூபாவை உடனடியாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் மீன்பிடிக் கூட்டுத்தாபனம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் விஷேட கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தற்போது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|