மீன்குஞ்சு வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சி திட்டம் – புதுமுறிப்பில் ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்துவதையும் நோக்காக கொண்ட மீன்குஞ்சு வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
சுமார் 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தேசிய நிகழ்ச்சி திட்டம் கிளிநொச்சி, புதுமுறிப்பு மீன் தொட்டிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
புதுமுறிப்பு பகுதியில் பிரதேச நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவற்காக தனியார் தொண்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட மீன் தொட்டிகள் பராமரிப்பின்றி கைவிடப்பட்டு இருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய 20 மில்லியன் நிதி ஓதுக்கீட்டில் முதற்கட்டமாக 5 தொட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 19.11.2023.
0000
Related posts:
|
|