மீன்கள் இருக்கின்ற இடத்தை கண்டுபிடிக்க பலநாள் படகுகளில் கருவிகள் – தொடர்புபட்ட நிறுவனத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

ஆழ்கடலில் மீன்கள் எங்கே இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்கும் கருவிகளை பலநாள் படகுகளுக்கு பொறுத்துவது தொடர்பாக தொடர்புபட்ட நிறுவனத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சத்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நவீன தொழில்நுட்பமாகக் கருதப்படும் மீன்களைக் கண்டுபிடிக்கும் கருவிகளை எமது பலநாள் படகுகள் பயன் படுத்துவதால் எமது கடற்றொழிலாளர்கள் பல நாட்கள் கடலில் காத்திருப்பதை தவிர்த்து மீன்கள் இருப்பதை அடையாளம் கண்டு பிடித்துக் கொண்டு குறுகிய காலத்திற்குள்ளேயே கரைக்கு திரும்ப முடியும் என்ற வசதிகள் இருப்பதையும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பலநாள் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|