மீண்டும் சேவையில் குமுதினி – தீவகத்தின் கடற்போக்குவரத்து தொடர்பில் நேரில் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, June 23rd, 2023

நீண்ட வரலாற்று தொடர்பை கொண்ட குமுதினிப் படகு மீண்டும் சேவையில் இணைவதற்கு தயாராகியுள்ள நிலையில்,  இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

யாழ்.குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல் வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி செயலிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் திருத்தப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குமுதினி படகின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குமுதினி படகு 1968 ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது

முன்பதாக  ஊர்காற்றுறை –  காரைநகர் இடையிலான போக்குவரத்து  செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று ஆராய்ந்தார்.

கரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும்  கடல் பாதையின் திருத்தப் பணிகளை பார்வையிட்டதுடன், கடல் பாதை பழுதடைந்தமையினால் பயணிகள் போக்குவரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயணிகள் படகினையும் பார்வையிட்டார்.

இதேவேளை ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த துறைமுகத்தில் குருநகர் மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் அதிகளவில்  நிறுத்தப்பட்டிருப்பதால், பிரதேச கடற்றொழிலாளர்களுக்கும் எழுவைதீவு, அனலைதீவு போன்ற தீவுகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கும் ஏற்படும் இடையூறுகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன், மாற்று ஏற்பாடுகள் பற்றிய அறிவுறுத்தல்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வல்வெட்டித்துறை, ரேவடி துறையில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டதுடன், குறித்த நீச்சல் தடாகத்தினை சிறப்பான முறையில் பராமரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்தது அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பிரதேச சபையின் செயலாளரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

000

Related posts: