மீண்டும் சேவைக்கு வருகிறது வடதாரகை – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, July 14th, 2021

குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையிலான போக்குவரத்தில் வடதாரகை பயணிகள் படகினை மீண்டும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீரான பராமரிப்பு இன்மையினால் சேவையில் ஈடுபடுத்த முடியாதளவு பழுதடைந்திருந்த வடதாரகையின் திருத்தப் பணிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில், அண்மைக் காலமாக நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் பல்வேறு அசௌகரியங்களை மக்கள் எதிர்கொண்ட நிலையில், கடற்படை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த வடதாரகையினை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(16.07.2021) தொடக்கம் தினந்தோறும் மூன்று தடவைகள் வடதாரகை பயணிகள் கப்பல், குறிகட்டுவானுக்கும் நெடுந்தீவிற்கும் இடையிலான சேவையை மேற்கொள்ளவுள்ளது.

M

Related posts: