மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா – தமிழ் மக்களின் தோல்வி காணாத ஏக தலைவரின் பதவியேற்பை வெடிகொழுத்தி கொண்டாடிய மக்கள்!

Wednesday, August 12th, 2020

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய  நாடாளுமன்றத்துக்கான 28 அமைச்சர்கள்  40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது  அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராகவும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் பதவியேற்றதை தொடர்ந்து வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

முன்பதாக 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கையின் வடபுலமான யாழ்ப்பாணத்தில் பிறந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில் கற்றிருந்தார்.

ஆரம்ப காலங்களில் ஈழ விடுதலைக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்ப கால போராளிகளில் முக்கிய ஒருவராக திகழ்ந்ததுடன் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு தளபதியாகவும் டக்ளஸ் தேவானந்தா விளங்கினார்.

பின்னாளில் ஒருசிலரின் தவறான வழிநடத்தல்களால் ஆயுதப் போராட்டம் திசைமாறி சென்றமையால் 1987 களில் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதன் பின்னர் ஜனநாயக அரசியலுக்கு மாறினார்.

இந்நிலையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதற்தடவையாக யாழ் – கிளிநெச்சி மாவட்ட மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்தார் டக்ளஸ் தேவானந்தா.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் , 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்ச்சியாக ஏழாவது தடவையாகவும் வெற்றிபெற்று தமிழ் மக்களின் தோற்றடிக்கப்பட முடியாத ஏக பிரதிநிதியாக நாடாளுமன்றுக்கு சென்றார் டக்ளஸ் தேவானந்தா .

இக்காலப்பகுதிகளில்  பல்வேறு அமைச்சுக்களை பொறுப்பேற்று தமிழ் மக்களின் துயர் நிறைந்த காலங்களில் பெரும்பணியாற்றிவருவதுடன் நல்லிணக்கம் இன நல்லுறவு போன்றவற்றின் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்துவருகின்றார். தமிழ் மக்களின் ஏக அரசியல் தலைவராக மட்டுமல்லாது தென்னிலங்கை அரசுகளினதும் பெரும்பான்மை மக்களினதும் நம்பிக்கைக்குரியவராகவும் காணப்படுகின்றார்.

குறிப்பாக 2000 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடக்கின் புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்து கலாசார அமைச்சராக பொறுப்பேற்று அளப்பெரிய பணியாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  2001 ஆண்டு தமிழ் விவகாரங்கள், வடக்கு மற்றும் கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மக்களின் எதிர்காலத்துக்கு ஒளிவிளக்கை ஏற்றிவைத்தவராகவும் டக்ளஸ் தேவானந்தா விளங்குகின்றார்.

அத்துடன் 2005 ஆண்டு இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச அன்று ஜனாதிபதியாக இருந்தபோது சமூக சேவைகள் மற்றும் சமூக நலன் அமைச்சராகவும் அதன்பின்னர் யுத்தம் நிறைவுற்று நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்ட பின்னரான காலப்பகுதியில் 2010 ஆண்டின்  அமைச்சரவையில் பாரம்பரிய தொழில்கள் மற்றும் சிறு நிறுவன மேம்பாடு அமைச்சராகவும் பொறுப்பேற்று தமிழ் மக்களுக்கு அளப்பெரிய பணியாற்றியுள்ளதுடன் இன்று வடபகுதியில் காணப்படும் எண்ணற்ற அபிவிருத்திகள் அனைத்துக்கும் ஏக உரித்தாளராகவும் காணப்படுகின்றார்.

இதன்பின்னர் 2019 ஆண்டு இன்றைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற்று ஜனாதிபதியானதும் அவரது தலைமையில் உருவான காபந்து அரசில் கடற்றொழில்  மற்றும் நீரக வள மூல அமைச்சராகவும் பெறுப்பெற்றிருந்தார்.

இந்நிலையில் 2020 ஆண்டு நடந்துமுடிந்த தேர்தலில் தொடர்ந்து ஏழாவது தடவையாக தமிழ் மக்களின் தோல்வி காணத தமிழ் தலைவராக நாடாளுமன்றம் சென்றுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராகவும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடமிருந்து நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சுகாதார தொண்டர் நியமன இழுபறி நிலைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
தமிழர்களின் உரிமைகளுக்கும் உயர்ந்த வாழ்கை தரத்திற்கும ஒரே வழிமுறை ஈ.பி.டி.பி. யின் பொறிமுறைதான் : அம...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகள் அனைத்தையும் இந்த அரசு அவரது மக்களுக்காக செய்துகொடுக்க தயார...