மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த ஆனந்தராசாவின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் வழங்கிவைப்பு!

Saturday, December 7th, 2019

கடல் தொழில்லில் ஈடுபட்டிருந்த வேளையில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இழப்பீட்டு தொகையாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கிவைத்தார்.

இன்றையதினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் அமைச்சரின் தலைமையில் பிரதேசத்தின் கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் மற்றும் கடல் சார் உயிரினங்களை வளர்ப்பது தொடர்பான ஆராய்வு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது குறித்த இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டது.

கடந்த ஜீன் மாதம் 29 ஆம் திகதியன்று கடும் மழைக்கும் மத்தியில் கடற்றொழிலுக்கு சென்றிருந்தபோது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி முருகானந்தம் ஆனந்தராசா என்ற 3 பிள்ளைகளின் தந்தை பலியானார்.

இந்நிலையில் குறித்த குடும்பத்தின் எதிர்காலம் கருதி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு குறித்த இழப்பீடு வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது 10 இலட்சம் ரூபா வுக்கான இழப்பீட்டு காசோலையை இறந்தவரின் மனைவியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்த பொதுத் தினமும், பொதுத் தூபியும் அவசியம் - நாடாளும...
யாழ் போதனா வைத்தியசாலை தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முற...
அமைச்சர் தேவானந்தாவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் ...