மாவை சேனாதிராசாவின் உரையை ஹான்சாட்டிலிருந்து அகற்றுங்கள் – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1500க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும், முல்லைத்தீவில் சுமார் 6000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. இக் குடும்பங்களும் மானிய அடிப்படையில் மின் இணைப்பைப் பெறும் நிலையிலுள்ள குடும்பங்களாகவே இருக்கின்றன என்பதையும் இங்கு அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி விவகார அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
அத்துடன், அம்பகமுவ பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கால்வாய்களை மையப்படுத்தி சிறிய பரிமாணத்திலான நீர் மூல மின்சார உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அங்குள்ள நீரக உயிரினங்கள் மற்றும் நீர்த் தாவரங்கள் என்பன அழிவடைந்து வருவதாகக் கூறப்படுகின்றது.
அதே நேரம், யடியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடமோதர பகுதியில் களணி கங்கையை மறைத்து மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச கிதுல்கல மின் உற்பத்தி நிலையத்தை செயற்படுத்தவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுதாகவும், இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அப்பகுதியில் பாரிய மண் சரிவுகள், வெள்ளம் மற்றும் பாரிய சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்களால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
எனவே, இவ்விடயங்கள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்கு ஒன்று தொடர்பாக நேற்று மாலை தனது நாடாளுமன்ற உரையில் பிரஸ்தாபித்துள்ளார்.
ஆனால் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு சட்டத்தின் பிரகாரம் அதனை விவாதிக்கவோ, விமர்சிக்கவோ முடியாது. ஆகையால் நாடாளுமன்ற ஹான்சாட்டிலிருந்து அதனை அகற்றுமாறு கௌரவ சபாநாயகர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
Related posts:
|
|