மாலைதீவு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் துரிதமான வினைத்திறன் மிக்க செயற்பாட்டினால் விரைவில் விடுதலையாகி நாடு திரும்பியுள்ளதாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் மாலைதீவில் கைது செய்யப்பட்டு விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தென்னிலங்கை மீனவர்கள் இன்று (18.12.2019) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு வந்து கௌரவ அமைச்சருக்கு நன்றி தெரிவித்தபோதே மேற்குறித்தவாறு தெரிவித்தனர்.
ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இயந்திரம் பழுதடைந்தமையினால் எல்லை தாண்டி மாலை தீவு கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மாலைதீவு அதிகாரிகளினால குறித்த மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்விடயம் கௌரவ அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவித்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கை காரணமாக சுமார் 13 நாட்களில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|