மாற்று வலுவுள்ள பல்கலை. மாணவர்களுக்கான மடிக்கணனி திட்டத்தில் மாற்றம் வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 21st, 2016

வடபகுதியில் வாழும் மாற்றுவலுவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கு மடிக்கணனி பெறுவதில் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகின்றது. பல்கலைக்கழகங்களில் தவணைக் கட்டணம் செலுத்தி மடிக்கணனிகள் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் இருப்பினும், இந்த தவணைக் கட்டணங்களைக்கூட செலுத்த வசதியில்லாத நிலையில் பலர் காணப்படுகின்றனர். இவ்வாறானவர்கள் மடிக்கணனிகளைப் பெறுவதற்கு ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் செய்யக்கூடிய சாத்தியங்களை உருவாக்கிதரவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்காவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்ற விவாத நேரத்தில் குறித்த மாற்றுத்திறனுடைய மாணவர்களது நிலைமை தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும் அவர் இதுதொடர்பாக குறிப்பிடுகையில்மாற்று வலுவுள்ள மாணவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு வரை போக்குவரத்து மானியமாக 750 ரூபா வழங்கப்பட்டதெனவும், தற்போது குறித்த ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் அது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது.

இந்த மானியத்தை மீண்டும் வழங்கக்கூடிய சாத்தியங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் .அத்துடன் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள  மாற்று வலுவுள்ளவர்களுக்கு சமூக வலுவூட்டல் நடவடிக்கைகள், சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன  வடக்கு – கிழக்கு மாகாணங்களில் போதியளவில் கிடைப்பதில்லை எனதெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கென வேறு விசேட திட்டங்களை ஏற்படுத்தி, அதன் ஊடாக உதவக்கூடிய சாத்தியப்பாடுகளை தெளிவுபடுத்த முடியுமா எனவும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

Related posts:

வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பையும் தேசிய பாதுகாப்பையும் இணைத்து முடிச்சுப் போட வேண்டாம்- டக்ளஸ் த...
நடமாடும் சேவையின்போது பணம் செலுத்தாது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித மக்களுக்கு அதை இலவசமாக வழங்...
அமைச்சரவை அனுமதியுடன் சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் –- டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!