மாற்றுத்தலைமை தொடர்பில் தெளிவோடு இருக்கும் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் கிடையாது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Wednesday, February 7th, 2018

இன்று எமது மக்கள் மாற்றுத்தலைமை ஒன்றின் தேவை தொடர்பில் தெளிவான நிலைக்கு வந்துள்ளனர். தெளிவோடு இருக்கும் தமிழ் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருந்தும் திரும்பத் திரும்ப தமிழ் மக்கள் மத்தியில் உணர்ச்சி பொங்க சக தமிழ்க் கட்சியினர் பேசி வருகின்றார்கள். இது ஏன் என்பதை மக்களே நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாhளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் பரப்புரை இறுதிக் கட்டக் கூட்டம் காரைநகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களைப் போன்று மீண்டும் ஒருதடவை வாக்குகளை அபகரிப்பதற்காகவே இவ்வாறு அவர்கள் பேசி வருகின்றார்கள். இதுதான் உண்மையும் கூட.

தமிழ் மக்களது உரிமை தொடர்பில் அவர்களுக்கு அக்கறை இருக்குமாயின் தாங்கள் கொண்டுவந்ததாகக் கூறும் தற்போதைய அரசுடன்; பேசி மக்களது தேவைகளையாவது பெற்றுக்கொடுத்திருக்கலாம். அத்துடன் இன்றுவரை தமிழ் மக்களின் அரசியல் அதிகாரங்களை தம்வசப்படுத்தி வைத்திருக்கும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர் யாரை தமது சுட்டுவிரலால் சுட்டிக்காட்டி எமது மக்களின் உரிமைக்கு தடையாக இருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்களோ அவர்களிடம் வெளிப்படையாக பேசி தீர்வுகளைக் கண்டிருக்கலாம். ஆனாலும் போதிய அரசியல் பலத்தைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதை மக்களின் எதிர்பார்ப்புக்களுக்காகப் பயன்படுத்தியிருக்கவில்லை.

மாறாக தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பிரச்சினைகளுக்குள் வைத்திருக்கவே அவர்கள் விரும்புகின்றார்கள். தமக்குள் இருக்கும் குத்துவெட்டுக்களையும் லஞ்ச ஊழல்களையும் போட்டிபோட்டு வெளிக்கொண்டுவந்துகொண்டிருக்கும் அவர்கள் நாட்டில் தற்போது இருக்கின்ற தேசிய நல்லிணக்கத்தைக் கூட சிதைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

எம்மைப் பொறுத்தவரையில் நாம் தேசிய நல்லிணக்கத்தை பலமாக கட்டியெழுப்புவதனூடாகவே எமது தீராப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணலாம் என்று உறுதியுடன் உழைத்துவருகின்றோம்.

அந்தவகையில்தான் இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தமது முழுமையான ஆதரவுப்பலத்தை தரவேண்டும் என்று நாம் உங்களிடம் உரிமையுடன் கோரி நிற்கின்றோம்.

ஆற்றலும் ஆளுமையும் தற்துணிவும் எங்களிடம் உண்டு. அத்துடன் தமிழ் மக்களின் தீரா பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேணடும் என்பதிலும் நாம் அதிக அக்கறை கொண்டு தொடர்ச்சியாக உழைத்து வருகின்றோம்.

எனவே மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றமானது எமது கட்சியின் பால் கொடுக்கப்படுமானால் நிச்சயம் நாம் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாது அவர்களது அரசியல் தீர்வுகளுக்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் காட்டுவதற்கு இந்த உள்ளுராட்சி மன்றங்களை ஆரம்ப படிகளாகக் கொண்டு உழைப்போம் என்றார்.

Related posts:


சமகாலத்தை நன்கு விளங்கிக் கொண்டதன் அடிப்படையில் தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை  ஆதரிக்கின்றோம் - வே...
எதிர்வரும் ஜுன் 29 இல் முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
ஆரோக்கியமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டம் மக்கள் மத்தியில் பார...