மாறாத துயரம் தந்த தியாகிகள் தினம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, June 19th, 2017

தோழர் பத்மநாபா அவர்களும், அவருடன் தோழர்களும் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு இன்று 27 வருடங்களாகின்றது. இன்றை தினத்தில் தோழர் நாபா அவர்களின் தோழமையையும்,அவரது பன்புகளையும் ஞாபகத்தில் ஏற்றி வைத்து துயரம் சுமக்கும் தியாகிகள் தினத்தில் தோழர்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கின்றேன் ன ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது –

ஈ.பி.ஆர்.எல்.எ.ப் இயக்கத்தை ஆரம்பிப்பதிலும்,வளர்த்தெடுப்பதிலும்,அதை பாலமான மக்கள் இயக்கமாக போராட்ட வரலாற்றில் நிலை நிறுத்துவதிலும் தூரநோக்கத்துடன் இரத்தம் விற்று வளர்த்தவர்கள் நாங்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.  தோழர் நாபாவின் இழப்பை தடுத்து நிறுத்தி அவரை பாதுகாத்திருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக தோழர் நாபாவை ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் இழந்துவிட்டது. எனக்கும் தோழர் நாபாவுக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்தாமல்,நான் தொடர்ந்தும் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் இருந்திருந்தால், தோழர் நாபாவை பாதுகாத்திருப்பேன் என்று இன்றுவரையும் நம்புகின்றேன்.

என்னையும் தோழர் நாபாவையும் உள்ளகச் சதிசெய்து இரு துருவங்களாகப் பிரித்து நாங்கள் அர்ப்பணிப்போடு வளர்த்தெடுத்த ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தை சிதைத்ததுடன் தோழர்களையும் நிர்க்கதியாக்கி,எதிரியிடம் தோழர் நாபாவையும் பலி கொடுத்துவிட்டார்கள். எனது பாதையில் நான் பயணிக்கத் தொடங்கியிருந்தாலும், தோழர் நாபாவுடன் பழகிய நாட்களையும்,அவரோடு பகிர்ந்துகொண்ட போராட்டச் சிந்தனைகளையும் அசைபோட மறந்ததில்லை. அவை பசுமையான ஞாபகங்களாக எப்போதும் என்னுள் இருக்கும்.
தோழர் நாபா சுமந்த சமூக சமத்துவக் கனவுகளையும், அவரது இலட்சிய சிந்தனைகளையும் நான் செல்லும் பாதையின் வழித்துணையாக கொண்டிருப்பேன்.
தோழர் நாபாவை இழந்து துயரம் சுமந்து உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் எனதருமை தோழர்களே, தமிழ்பேசும் இனம் சமத்துவத்துடனும்,கௌரவத்துடனும் வாழ்வதற்கான நமது இலட்சியம் வெல்லப்படும் நாள்வரை எனது பயணத்தில் முழு உறுதியுடன் முயற்சி செய்வேன்.

Related posts:

அமைச்சர் டக்ளஸின் மற்றுமொரு கனவும் நனவானது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்ச...
கடற்றொழிலாளர்களுக்கு சீனா மண்ணெண்ணை நன்கொடை - காலத்தின் தேவையறிந்த உதவிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி த...
கல்லூண்டாய் குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்...