மாங்குளத்தில் ஈ.பி.டி.பியின் முல்லை மாவட்ட அலுவலகம் – திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, July 7th, 2024

மாங்குளத்தில் ஈ.பி.டி.பி அலுவலகம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.  முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகம் இன்று மாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது.

பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டும், கட்சியினால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் சேவைகளை இலகுபடுத்துவதற்கும் ஏ 9 வீதியில் , மாங்குளத்தில் அமையப்பெற்ற அலுவலகத்தை அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா இன்று (07.07.2024) திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் ஈபிடிபியின் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கட்சியின் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களும், ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

000

Related posts: