மழை நீர் சேமிக்க பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, March 15th, 2019

மழை நீர் சேகரிப்பினை மேலும் பரவலாக மேற்கொள்வதற்கும் பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.  வடக்கிலே குறிப்பாக பூநகரிக் குளத் திட்டம், பாலியாற்றுத் திட்டம், மற்றும் மழை காலங்களில் வன்னேரிக் குளத்திலிருந்து அதிகளவில் வெளியேறுகின்ற நீரைத் தாங்கக் கூடியதாக தேவன் குளத்தை வன்னேரிக் குளத்துடன் இணைக்கும் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து ஆராய முடியும். இதற்கென ஜய்க்கா நிறுவன நிதியுதவியுடனான ‘எல்லங்கா’ திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நினைக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அதேநேரம், நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடனான ‘யாழ்ப்பாணத்திற்கு நீர்’ திட்டமும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிய வருகின்றது. அதேநேரம் வடமத்திய கால்வாய்த் திட்டமும் செயற்படுத்தப்படுமானால் வடக்கின் நீர்த் தேவையினை போதுமானளவு பூர்த்தி செய்ய முடியும் என எண்ணுகின்றேன். மாவலி ‘எல்’ வலையத் திட்டமும் எமது மக்களுக்கு மிக முக்கியமானதொரு திட்டமாகும் என்றார்.


இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய மக்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தித் தாருங்கள் - டக்ளஸ் தேவானந்தா...
பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
சபரிமலை யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அமைச்சரவை அங்கீ...
நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...