மழை நீரை சேமித்துப் பயன்படுத்த  மக்களுக்கு விழிப்புனர்வூட்ட வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா

Friday, August 25th, 2017

விதைநெல், சேதனப்பசளை, நடுகைப்பொருட்கள், களை கொல்லிகள் போன்ற விவசாய உள்ளீடுகளை மானியத் திட்டத்தின் கீழ் சகாய விலையில் அல்லது முடியுமானால் இலவசமாக வரட்சியினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

தற்பொழுது பயன்தரு வீட்டு விலங்குகளான ஆடு, மாடு, கோழி வளர்ப்போர் தண்ணீர் தேடி பல மைல் தூரம் தமது பட்டிகளைச் சாய்த்துக் கொண்டு நீருக்காகவும் உணவுக்காகவும்; அலைந்து திரிகின்றார்கள்.

எனவே பயன்தரு விலங்குகளையும் பறவைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். இதற்காக மழைக் காலத்தில் மழை நீரை அறுவடை செய்து பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.

மேச்சல் நிலங்களில் புற்தரைகள் வரட்சியினால் வரண்டு செத்தமையினால் பால் தரும் கறவைப் பசுக்களுக்கு சத்துணவான சைலேச் செய்வதற்கு புற்களை வெட்டி யூரியா, சீனி, உப்புக் கலவை சேர்த்து சத்துணவு செய்து விலங்கினங்களுக்கு உணவளித்து பால் உற்பத்தியை அதிகரிக்க முடியாமல் உள்ளது.

பால் பற்றாக்குறையானது பாலுணவு தேவைப்படும் குழந்தைகளையும் கற்பிணித் தாய்மார்களையும் பாதிக்கும்.

எனவே வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கிழுவை, பூவரசு, அகத்தி, முருங்கை, வாழை போன்ற தாவரங்களின் நடுகைப் பொருட்களை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் கால்நடைகளுக்குத் தேவையான புண்ணாக்கு சோளக் கலவை போன்ற அடர் தீவனங்களை குறைந்த தீர்வையில் இறக்குமதி செய்து சகாய விலையில் கூட்டுறவுக் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

சமகாலத்தில், விலங்குகளுக்கான அடர் தீவனங்களின் உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வரட்சியின் காரணத்தினால் இவ்வாண்டில் நெல் விளைச்சல் கடந்த ஆண்டிலும் பார்க்க நாற்பது (40) வீதம் குறையும் என்றும், கடந்த ஐந்து (5) ஆண்டுகளின் சராசரி விளைச்சல் மகசூல்களுடன் ஒப்பிடும் போது முப்பத்தைந்து (35) வீதத்தால் குறையும் என்றும்,

இது 2004ஆம் ஆண்டின் பின்னர் கிடைக்கப்பெறும் குறைந்த விளைச்சல் ஆகும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் தொழிற்படையில் அண்ணளவாக இருபத்தி ஐந்து (25) வீதமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளமையால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு விவசாயத்துறையினால் செய்யப்படும் பங்களிப்புப் பாரிய தாக்கத்திற்கு உள்ளாகும் என்றும் மேலும் கூறப்படுகின்றது.

விவசாயம் நமது பொருளாதாரத்தில் மொத்தத் தேசிய உற்பத்தியில் எட்டு (8) சதவீதம் அளவு பங்களிப்புச் செய்கின்றது.

எமது வடமாகாணத்திலுள்ள கிராமத்து மண்ணின் மைந்தர்கள் தொழில் தேடி நகரங்களை நோக்கியும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்லும் இக்கட்டான நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

உலக வரலாற்றில் குறிப்பாக நமது இலங்கையின் வரலாற்றில் ஆதிவாசிகளின் காலம், ஆரிய-திராவிடர் காலம், போத்துக்கேயர் காலம், ஒல்லாந்தர்களின் காலம், ஆங்கிலேயர்களின் காலம் என்ற வரலாற்றுக் காலகட்டங்கள் விளக்கப்படுகின்றன.

நாட்டின் பல குறிப்பிபட்ட மாவட்டங்களில் நிலவுகின்ற வரட்சி பற்றிய சபை ஒத்திவைப்பு நேர விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து ள்ளார்

Related posts:

அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆ...