மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Wednesday, September 19th, 2018

மலையக மக்களது வாழ்க்கையில் உண்மையான மறுமலர்ச்சியினை எற்படுத்துகின்ற வகையில் இந்த பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். அதனை சாத்தியமாக்கிக் கொள்வதற்கு மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் தலைவர்களும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கைவிடுத்துள்ளார்

நாடாளுமன்றில் நடைபெற்ற பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகள் மற்றும் இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் தொடர்பிலான சட்டமூலங்கள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டிதன் தேவையும் இருக்கின்றது. இது தொடர்பிலும் அவதானம் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

குறிப்பாக, மலையக மக்கள் தோட்டம் என்கின்ற கட்டமைப்பை மீறி வெளியில் வர வேண்டிய அவசியம் உணர்த்ததப்பட்டு வருகின்றது. அதற்கான பணிகளை மேற்படி அதிகார சபை மேற்கொள்ளும் என நினைக்கின்றேன்.

அதேநேரம், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களைத் தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களது வாழ்க்கை நிலைகள் தொடர்பில் உரிய அவதானங்கள் செலத்தப்பட்டு வருவதாகத் தெரிய வரவில்லை. அண்மையில்கூட ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற பெருந் தோட்டத்துறை மக்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.

அதேபோன்று தென், சப்பிரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற பெருந்தோட்டத்துறை மக்களது பிரச்சினைகள் தொடர்பிலும் மிக அதிகமானளவு அவதானங்கள் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இங்கே வலியுறுத்துகின்றேன்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பெருந் தோட்டப் பகுதிகளிலிருந்து வந்து குடியேறிய மக்கள் பெருமளவில் இருக்கின்றனர். இந்த மக்களை நாம்  வடக்கு மாகாண மக்களாகவே கருதுகின்றோம். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற அனைத்து மக்களும் அண்மைக்காலமாக  பாரிய பாதிப்புகளை – பல்வேறு வழிகளில் எதிர்நோக்கியவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களை இந்த பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமைப்பாடு எம்மையே சாரும். அதனை கூடிய விரைவில் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Untitled-5 copy

Related posts:


யுத்தத்தில் உயிர் நீத்த மக்களை நினைவேந்த நினவுச் சதுக்கமும் பொதுத்தினமும்! தலைவர் டக்ளஸ் தேவானந்தாவி...
மக்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்வு பெற்றுத்தரப்படும் – மறவன்புலவு காற்றலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...
முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பபடும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை - ...