மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Wednesday, September 19th, 2018

அன்று மலையக மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் அச்சட்டத்திற்கு சார்பாக கையுயர்த்திய வடக்கு மாகாண தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகளின் ஈனச் செயல்களும் இந்த பாவக் காரியத்தின் பின்னணியில் இருந்ததையிட்டு, வடக்கு மாகாண மக்களின் பிரதிநிதியாக இருக்கின்ற நான் வெட்கப்பட வேண்டியுள்ளது. அதே அரசியல்வாதிகளின் குடும்ப வாரிசுகள் தான் இன்று தமது சுயலாப அரசியலுக்காக போலி தமிழ்த் தேசியத்தை தீவிரமாக உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகள் மற்றும் இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் தொடர்பிலான சட்டமூலங்கள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

1931ஆம் ஆண்டின் டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இம் மக்களும் இலங்கை பிரஜைகளாகவே கருதப்பட்டனர். எனினும், தொழில் ரீதியாக இம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டே வந்திருந்தனர்.

பின்னர், 1944ல் சோல்பரி விசாரணைக் குழு பரிந்துரைத்திருந்த சீர்திருத்தங்கள் இம் மக்களைப் புறக்கணித்ததன் காரணமாக,  1949ல் தேர்தல் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டு, இம் மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1949ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இம் மக்கள் சார்ந்து 6 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. இவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் எதுவுமே அம் மக்களுக்கு எவ்விதமான நிறைவினையும் தராத சட்டங்களாகவே இருக்கின்றன.

மலையக மக்களுக்கு வாக்குரிமை இருப்பின் இந்த நாட்டில் தமிழ் பேசுகின்ற மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்கள் அதிகமாகும், அதிகமாகின்ற நிலையில் அவர்களுக்கான உரிமைகள் தொடர்பில் கோரிக்கைகள் எழும், அவற்றை வழங்க வேண்டி வரும் என்றெல்லாம் சிந்தித்தே அன்று இந்த மக்களின் வாக்குரிமையானது பறிக்கப்பட்டது. இதற்கு சார்பாக வடக்கின் அரசியல்வாதிகள் அன்;று தங்களது சுயலாப வசதிகளுக்காக சோரம் போனதுடன், மலையக மக்களது வரலாற்றில் துரோகிகளாகவே இன்றும் கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இதை அறிந்தும், அந்த அரசியல்வாதிகளின் குடும்ப வாரிசுகள் போலி தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருப்பதுதான் விந்தையாக இருக்கின்றது.

அந்தவகையில், தேசிய நீரோட்டத்தின் கரைகளில்கூட அம் மக்களை கண்டு கொள்ளச் செய்யாத செயற்பாடுகளே இந்த நாட்டில் முன்னnடுக்கப்பட்டு வந்துள்ளன. அதற்கு இந்த தமிழ் அரசியல்வாதிகளும் துணை போயிருக்கின்றனர்.

land_grab_polyp_cartoon_-_no_border

Related posts: