மலர்ந்தது தமிழர் அரசு என்று கூறியவர்களால் அழிந்தது வடக்கின் கல்வி – உரும்பிராயில் டக்ளஸ் எம்.பி!

Sunday, January 28th, 2018

யுத்த காலங்களிலும் சரி யுத்தம் நிறைவு பெற்று வடக்கு மாகாணத்தை ஆளுனரூடாக நாம் நெறிப்படுத்தியபோதும் சரி இலங்கையில் வடக்கு மாகாணம் கல்வியில் முதலிடத்தை பெற்றிருந்த நிலையில் அந்த மாகாணசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதன்பின் கல்வியில் இறுதி நிலையை எட்டியுள்ளது வேதனையளிக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்ட உரும்பிராய் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலே யே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாண சபையின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பில் பொதுமக்கள் இன்று நன்கு தெரிந்துகொண்டுள்ளனர். மலர்ந்தது தமிழரசு என்று கூறி ஆட்சி அதிகாரத்தை தம்வசம் கொண்டுள்ள கூட்டமைப்பினர் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் அவலங்களையும் துயரங்களையும் சுமந்துவாழும் மக்களது சாதாரண பிரச்சினைகளுக்குக் கூட அவர்களால் தீர்வுகாணமுடியாத நிலை காணப்படுவதுடன் நிதிமோசடியும் அதிகார துஷ்பிரயோகத்தாலும் அது மூழ்கிக் கிடக்கிறது.

எனவே மக்களது வாழ்வியல் நிலைமைகள் ஒளிபெறவேண்டுமாயின்  வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்தி எம்மை வெற்றி பெறவைக்கும் பட்சத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மட்டுமல்லாது  மாகாணசபையிலும் எதுவித துஷ்பிரயோகங்களும் நடைபெற இடமளிக்க மாட்டோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts: